
ஹஜ் உம்ரா செல்கிறவர்களுக்கு எனக்கு தெரிந்த சில டிப்ஸ்கள்.
எல்லோரும் மொத்தமா ட்ராவல்ஸ் மூலமாக தான் போவீர்கள். அங்கு அவர்களே எல்லாம் கைட் பண்ணுவார்கள். இருந்தாலும் என் டிப்ஸும் உங்களுக்கு உதவியாக இருக்கும்
ஆனால் சிலர் வெளிநாடுகளில் பிள்ளைகளோடு பிரைவேட்டாகவும் வருவார்கள்.
முதலில் பெட்டி பேக் பற்றி பார்ப்போம், என்ன தான் பார்த்து பார்த்து வாங்கினாலும் அங்கு போய் அது பிஞ்சி போய் விடும், நிறைய தூரம் நடக்கும் போது அங்கு சென்ற பல பேருக்கு இந்த அவஸ்தை ஏற்பட்டு தூக்க முடியாமல் தூக்கி வந்து இருக்கிறார்கள்.
ஆகையால் இப்ப எல்லா இடத்திலும் ஈசியா தள்ளி கொண்டு போகும் டிராலி பெட்டி சின்ன சைசில் இருந்து பெரிய அளவு வரை கிடைக்கிறது.
அதை வாங்கிக்கொள்ளுங்கள். அடுத்து ஹான்ட் பேக் ஆண்களும் சரி பெண்களும் சரி பிள்ளைகள் பள்ளிக்கு எடுத்து போகும் ஸ்கூல் பேக் எடுத்து கொள்ளுங்கள். வசதியா தோளில் மாட்டி கொள்ளலாம். அதில் நிறைய ஜிப்கள் இருக்கும்.
-- தேவையான பொருட்களைத்தனித்தனியாக வைத்து கொள்ளலாம், பிஸ்கேட் கூட அதில் சைடில் இருக்கும் சின்ன ஜிப்பில் வைத்து கொள்ளலாம். சின்ன தண்ணீர்பாட்டிலும் வைத்து கொள்ளலம்.
ஒரு சிறிய ஒன்னறை டம்ளர் டீ கொள்ளும் அளவிற்கு சிறிய பிளாஸ்க் வைத்து கொள்ளுங்கள். அது எப்பவும் கையில் எடுத்து செல்லும் பையில் இருக்கட்டும். அதில் சூடான வெண்ணீர் (அ) டீ வாங்கி ஊற்றி கொள்ளுங்கள்.
சிலருக்கு தொண்டை கர கரப்பு ஏற்படும் கிராம்பு + கல்கண்டு கலந்த கலவை எப்போதும் பேகில் வைத்து கொள்ளுங்கள். தொண்டை கர கரப்பு ஏற்படும் போது இரண்டு எடுத்து வாயில் ஓரமா அடக்கி வைத்து கொள்ளலாம்.
பிளாஸ்டிக் கவர்கள் நிறைய வைத்து கொள்ளவும்.
பிஸ்கேட், சின்ன பாக்கெட்டுகளாக கிடைத்தால் அப்படி வாங்கிவைத்து கொண்டால் தினம் இரண்டு சின்ன பாக்கெட் பிஸ்கேட், டீ, பேரித்தம் பழம், கொஞ்சம் நட்ஸ்வகைகள். கை பையில் வைத்து கொள்ளலாம்.என்ன ஒரே சாப்பாடை பற்றி சொல்றீங்க அங்கு என்ன சாப்பிடவா போறோம் என்றூ நினைக்க வேண்டாம்.
காலையில் தஹஜ்ஜத்துக்கு போனா சுஃபு தொழுத்துட்டு தான் வருவீர்கள். அதே போல் அசருக்கு போனால் இஷாமுடிந்து தான் வருவீர்கள். அதற்கிடையில் கூட்டத்தில் இருந்து மீண்டு வெளியில் வரனும் சிலருக்கு மூச்சடைப்பு, மயக்கம் வர வாய்ப்பிருக்கு. அவர்கள் சிறிது பசியை ஆற்றி கொண்டால் கூட்டத்தில் நடக்க கொள்ள சிறிது தெம்பாக இருக்கும்.
புதுசா ஊர் விட்டு ஊர் வருகிறவர்கள், ஒன்றும் புரியாது, கூட்டத்தில் கொஞ்சம் மிஸ் ஆனாலும் எங்கயாவது போய் தள்ளிடும், கூட வந்தவர்களை தேடி நடப்பதே பெரிய விஷியமா இருக்கும். இது நிறைய பெயர் தொலைந்து அழுதும் இருக்கிறார்கள். ஆகையால் உள்ளே சென்றதும் அவரவர் இபாபத்தை செய்யுங்கள், வெளியில் ஒரு இடம் எல்லோரும் சேர்ந்து பேசி வைத்து கொள்ளுங்கள். மெயினா அங்கு நிறைய கேட் இருப்பதால் கேட் நம்பரை குறித்து வைத்து கொள்ளுங்கள். (அ) வெளியில் இரண்டு கேட் பக்கம் பாத்ரூம் இருக்கு அந்த இடத்தை மீட்டிங் பாயின்ட்டா தேர்ந்தெடுத்துகொள்ளுங்கள். அப்படியும் இல்லையா மக்கா வெளியில் நிறைய கடைகள் இருக்கு பிட்ஜா, கே.எஃப்.சி போன்ற கடைகளில் ஒன்று கூடி கொள்ளுங்கள்.
அங்கு கூட்டத்தில் தேடுவது சிரமாமாக இருக்கும். ஆகையால் கைபை (அ) தலையில் அணியும் ஸ்கார்ப் ஏதாவது கலரில் போட்டு கொள்ளுங்கள்.
மஞ்சள் , ஆரஞ்சு, பச்சை, சிவப்பு என்று அது உடனே கண்டு பிடிக்க வசதியாக இருக்கும்.
துணிகாய போட கொடி கட்டும் கயிறு , ஹேங்கர், கிளிப்புகள் போன்றவை கண்டிப்பாக தேவை. கத்திரிக்கோல், ஊசி , நூல், சேஃப்டி பிண் பெரிய பிண் வாங்கிக்கொள்ளுங்கள். இதெல்லாம் பிளைட்டில் போகும் போது கை பையில் வைக்க வேண்டாம். பெரிய லக்கேஜில் முன்புறம் உள்ள ஜிப்பில் வைத்து கொள்ளுங்கள். அங்கு சென்றது எடுத்து கை பையில் வைத்து கொள்ளுங்கள், அதே போல் திரும்பி ஊருக்கு வரும் போது பெரிய லக்கேஜில் போடுங்கள்.
இன்னும் ஒன்று செருப்பு, புது செருப்பு வாங்கி போட்டு செல்ல வேண்டாம், நடக்க முடியாது கால் வலி ஏற்படும், நல்ல ஷாஃட்டான செருப்பு ஒரு மாதம் முன் போட்டு பழக்க படுத்தியது போட்டு செல்லவும். அங்கும் எல்லாம் விற்கிறது. அங்கு கிடைக்காத பொருட்களே ஆனால் பழக்க படாத ஆட்களுக்கு போனதும் தேடுவது சிரமம்.
இது சகோதரர் நவாஸ் சொன்னது யாரும் உங்கள் உறவினர் அங்குசெல்பவருக்கு உதவி தேவை என்றால் அவர் கீழே கொடுத்துள்ள நம்பரில் தொடர்பு கொள்ளவும்.
ஹாஜிகள் தெரிந்துகொள்ள வேண்டிய நல்ல தகவல் கொடுத்திருக்கின்றீர்கள்.நண்பர்கள், அவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் யாரேனும் ஹஜ்ஜுக்கு வருவதாக இருந்தால் அவர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்படுமானால் என்னை +966 504672540 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளச்சொல்லுங்கள். நான் ஜித்தாஹ்வில் இருக்கிறேன். என்னால் முடிந்த உதவிகள் அவர்களுக்கு செய்ய எனக்கு உதவி செய்யுங்கள்.ஒரு சிறு குறிப்பு. உணவு தயாரிப்பதற்குண்டான மசாலா கொண்டு வருபவர்கள் “கசா கசா” கொண்டு வரவேண்டாம். அது இங்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகும். வீணான பிரச்சனை ஏர்ப்போர்ட்டில் ஏறபடும்.
முடிந்த வரை இதில் எனக்கு தெரிந்த டிப்ஸ் போட்டு விட்டேன், இன்னும் முக்கியமான இரண்டு விஷியம் இருக்கு அது அடுத்த பதிவில் போடு கிறேன்.
6 comments:
ஹஜ், உம்ராவிற்கு வருபவர்கள் எல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள். அருமையான ஒரு பகிர்வு.
பாராட்டுக்கள் சகோதரி
சகோதரி நீங்க ஹஜ் யாத்திரை போயிருக்கிங்களா? அங்க அந்த புனித நதியில்(பெயர் ஞாபகம் வரவில்லை) குளித்துள்ளீர்களா? அந்த நதியின் நீரை எடுத்து வந்துள்ளீர்களா. நல்ல கட்டுரைப் பதிவு. நன்றி.
தகுந்த நேரத்தில் பயனுள்ள பதிவு, இறைவனின் அருள் நம் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக.
my name is azeem basha i am residing in jeddah, insha allah i am planning go as volunteer to help hajis in mina for last 3 days of haj, hajis can call me in mina if they need any help. my mobile no. 0502032546
நவாஸ், சுதாகர், ஷபிக்ஸ் நன்றி
அஜீம் வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும், உதவுவதாக நம்பரும் தந்து இருக்கீங்க, கண்டிப்பா இந்த பதிவை பார்ப்பவர்கள் இந்த வருடம் ஹஜ் செல்பவர்கலுக்கு இந்த நம்பரை கொடுக்கவும்.
போன வருடம் நீங்கள் கொடுத்த நம்பரெல்லாம் எனக்கு கிடைத்திருக்கலாம், என் உம்மா வாப்பா , வயதானவர்கள், உடல் நலம் சரியில்லாதவர்கள் ரொம்ப கழ்ட பட்டார்கள், மககாவில் ஆள் இருந்தார்கள், ஆனால் கல் எரியும் போது தான் இருவரும் வாப்பாவால் நடக்க முடியததால் வந்து நின்ற பஸ்ஸில் கூட ஏற முடியாமல் தவிததார்கள்.
ஆனால் அந்த வல்ல நாயனை போற்ற வார்த்தைகள் இல்லை, முடியாமல் இருந்த அவர்களையும் ஹஜ் செய்யவைத்து ஊர் வந்து சேர்த்ததற்கு, அங்கு பாஸ்போட் கையில் கொடுக்கதாதால் வாப்பாஒரு பிளைட்டிலும் , உம்மா அடுத்த பிலைட்டிலும் வந்து சேர்ந்தார்கள்.
டிப்ஸ்கென தனி வலைப்பூ அருமையாக மணம் வீசிக்கொண்டிருக்கிறது .
வாழ்த்துக்கள்
நானும் அடிக்கடி வருகிறேன்.
Post a Comment