Thursday, October 29, 2009

முடிவளற கொசுறு கருவேப்பிலை


கருவேப்பிலை காய்கறி கடைகளில் கொசுறு கொடுப்பார்கள்.அது ஒன்றும் அவ்வளவு விலையும் கிடையாது.



முடி கரு கருவென வளற கருவேப்பிலை ஒரு கப்பும், வெந்தயம் இரண்டு ஸ்பூனும் காயவைத்து பொடித்து வைத்து கொள்ளுங்கள்.
கருவேப்பிலை கொத்துமல்லி ரசம்


கருவேப்பிலையை நன்கு அரைத்து வடைகளாக தட்டி தேங்காய் எண்ணையிலும் போட்டு நன்கு ஊறவைத்து தலைக்கு தேய்க்கலாம்



கருவேப்பிலை பொடி

கருவேப்பிலை - ஒரு கப்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு மேசை கரண்டி
மிளகு - ஒரு ஸ்பூன்
பூண்டு = தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளுங்கள்

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் லேசாக வருத்து பொடித்து வைத்து கொள்ளுங்கள்.



ஒல்லியாக உள்ளவர்கள் ஒரு மேசை கரண்டி கருவேப்பிலை பொடி, நெய் ஒரு ஸ்பூன், சாதம் கலந்து சாப்பிடுங்கள்.



டயட்டில் இருப்பவர்கள் ஆலிவ் ஆயில் (அ) நல்லெண்ணை கலந்து சாப்பிடவும்.


கருவேப்பிலை பொடி திரிப்பவர்கள் அத்துடன் சிறிது மிளகு, கடலை பருப்பு கூட வருத்து சேர்த்து பொடித்து கொள்ளலாம்.


இட்லி பொடி, ரசப்பொடி, சாம்பார் பொடி,பிஸிபேளா பாத் பொடி ,பாகற்காய் போன்ற பொடி வகைக தயாரிக்கும் போது ஒரு கைப்பிடி அளவிற்கு காயவைத்து அதையும் சேர்த்து திரித்து கொள்ளுங்கள்.

கீரீன் வெஜ் குருமாவில் கருவேப்பிலை, கொத்து மல்லி தழை, புதினா அரைத்தும் சேர்த்துக்கொள்ளலாம்.

வறுத்து பொடித்து செய்யும் எல்லா விதமான சமையலுக்கும் ஒரு கை பிடி கருவேப்பிலையை சேர்த்து கொள்ளுங்கள்.

தலை முடி கருகருவெனவளற கருவேப்பிலையை காயவைத்து தூளாக்கி நல்லெண்ணையுடன் காய்ச்சி நன்கு ஊறவைத்து வடிக்கட்டி அந்த எண்ணையை தினம் தேய்த்து வரலாம்.

வாரம் ஒரு முறை கருவேப்பிலை குழம்பு , கருவேப்பிலை சாதம், செய்து சாப்பிடுவதும் நல்லது.
கருவேப்பிலை, கொத்துமல்லி அரைத்து விட்டும் ரசம் செய்து சாப்பிடலாம்.

தாளிப்பில் போடும் கொசுறு கருவேப்பிலை, ரசம் குழம்பு சாப்பிடும் போது தூக்கி எறியாமல் அதை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் அது முடி வளற உதவும்.

பகோடா செய்யும் போது நிறைய கருவேப்பிலையை பைனா சாப் செய்து போட்டு கொள்ளுங்கள்.





4 comments:

S.A. நவாஸுதீன் said...

அருமையா யோசனை. மிக அருமையான டிப்ஸ்.

Jaleela Kamal said...

நன்றி நவாஸ்,

Athira said...

ஜலீலாக்கா... உங்களுக்கு "பூஸ்ட்" கொடுக்க பூட்ஸ்ஸோட வந்திருக்கிறேன்(இங்கு சரியான குளிர்).

பதுவு போட இருதரம் வந்து திரும்பி ஓடிவிட்டேன். நிறைய விஷயங்கள் அழகாகச் சொல்லியிருக்கிறீங்கள். மெதுவாக வாசிக்கவேண்டும்.

கறிவேப்பிலை பற்றிய தகவல் அருமை. இங்கு வாங்குவதுதான் கஸ்டம். எனக்கு இது சாப்பிடப் பிடிக்கும். அதுசரி கொசுறு என்றால் என்ன? புரியவில்லை.

தொடருங்கள்.. நானும் தொடர்கிறேன் உங்களை....

Jaleela Kamal said...

அதிரா நீங்கள் கொடுத்த பூஸ்ட் இரண்டு கப் குடிச்சாச்சு இன்னும் தெம்பில்லை ஊரிலிருந்து வந்ததிலிருந்து இன்னும் பதிவுகள் போட முடியாம இருக்கு.

கொசுறு என்றால், கடையில் நிறைய காய் கறிகள் வாங்கினால் அந்த கருவேப்பிலை ஈனாமா கொடுப்பாங்க (ஈனாம், கொசுறு,ஃபிரியா)அதான் கொசுறு கருவேப்பிலை என்றேன்.
இறட்டையர்கள் எப்படி இருக்கிறார்கள், நலமோ, டாக்டர் இப்ப என்ன சொல்கிறார்.