Tuesday, December 15, 2009

தோசை மொருகலா வரனுமா?


எல்லோருக்கும் தோசை என்றாலே மொரு மொருன்னு ஹோட்டல் மாதிரி சாப்பிடதான் பிடிக்கும்.

சிலருக்கு தேசை மொருகலாக வராது அப்படியே போய் கல்லில் ஒட்டி கொள்ளும். அதோடு கிடந்து சண்டை போடனும்.

தவ்வா ரொம்ப காய்ந்து இருந்தாலும், அந்த தவ்வாவில் ரொட்டி சுட்டு இருந்தாலும் தோசை சரியா வராது.

தவ்வாவை லேசாக சூடு படுத்தி சிறிது எண்ணை விட்டு அரை வெங்காயத்தை கட் செய்து அப்படியே வட்ட வடிவமாக தேய்க்க வேண்டும்.

பிறகு தோசை வார்த்தால் சூப்பரான மொருகலான தோசை சொய்யின்னு ஊற்றியதும் எடுக்கும் பக்குவத்தில் எழும்பி நிற்கும்.

மொருகலான தோசைக்கு ஒரு கரண்டி நடுவில் ஊற்றி அப்படியே சுழற்றி விடனும்.
பிற‌கு எண்ணையை சுற்றிலும் தெளித்தார் போல‌ ஊற்ற‌னும்.

ப‌ஞ்சு தோசைக்கு த‌டிம‌னாக‌ ஒரு க‌ர‌ண்டி விட்டு உள்ள‌ங்கை அள‌வு சுற்றினால் போதும். இதற்கு லேசாக எண்ணை ஊற்றினால் போதும்.

அப்பாடா இட்லி தோசைக்கு மாவு அரைத்து வைத்து விட்டால் என்னேரமும் டிபன் ரெடி.

இந்த குளிர் காலத்தில் மாவு புளிக்காது அதற்கு அரைத்ததும் கைகளால் நல்ல பிசைந்து விட்டு புளிக்க விடவும்.

15 comments:

அண்ணாமலையான் said...

எனக்கு இருக்கற பசிக்கு முருகலா இல்ல கருகலா இருந்தாலும் ஓக்கேதான்.நீங்க தொடர்ந்து கலக்குங்க.

SUFFIX said...

சரி ரைட்டு:)

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஆனா நான் தோசை போட்டா மட்டும் அது தோசக்கல்ல அப்படியே ஜெராக்ஸ் எடுத்துட்டு வருது ஏன் ???

ஹைஷ்126 said...

எனக்கு இரண்டாம் முறையில் சொன்ன தோசைதான் பிடிக்கும். நல்ல டிப்ஸ். நன்றி

வாழ்க வளமுடன்

Jaleela Kamal said...

அண்ணாமலயான் ஆகா கருகலாக இருந்தாலும் சாப்பிடுவீஙக்ளா?அது உடம்பிற்கு ஆகாதே?


வருகைக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

ஷ‌ஃபிக்ஸ் @ நன்றி, ஒகே நோட் பண்ணியாச்சா

Jaleela Kamal said...

ராஜ்
//ஆனா நான் தோசை போட்டா மட்டும் அது தோசக்கல்ல அப்படியே ஜெராக்ஸ் எடுத்துட்டு வருது ஏன் ??? //



உங்களுக்குமட்டும் எப்டிங்கண்ணா இப்படி ஒரு நக்கல் நயாண்டி பதில் சொல்ல வருது.... உஙக்ள் நல்ல உள்ளம் தோசையில தெரியுதுங்கண்ணா

Jaleela Kamal said...

வாங்க சகோதரர் ஹைஷ்

பஞ்சி தோசைய தானே சொல்றீங்கள் எண்ணையில்லாமல் தக்காளி சட்னி ( அ) இட்லி மிளகாய் பொடியுடன் சாப்பிட சூப்பரா இருக்கு.

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

S.A. நவாஸுதீன் said...

எங்க வீட்ல கூட தோசை கல்லில் தடவும் (ஒரு வெள்ளைத்துணியில் நசுக்கிய வெங்காயம்)முடிச்சு தான் உம்மா உபயோகிச்சதா நினைவுண்டு. அது பெர்மனெண்ட்டா அந்த எண்ணெய் கின்னத்திலேயேதான் இருக்கும்.

Jaleela Kamal said...

ஆமாம் நவாழ் நீங்கள் சொல்வது சரி, சிண்டு கட்டி வைப்பார்கள்.

ஆப்பத்துக்கு கூட அப்படி தான் செய்வார்கள். அது ஸ்டாக்கா ஒரு கின்ன‌த்தில் இருக்கும்.

டவுசர் பாண்டி said...

சகோதரி ஜலீலா !! நீங்க இது வெரிக்கும் எழ்தின அல்லாத்தையும் , எப்படி பதிவிறக்கரதுன்னு என்னோட பதிவுல சொல்லிக் கீரேன் !! வந்து பாருங்க உங்க கருத்த சொல்லுங்க !!

மகா said...

thanks for the paper roast ....

Jaleela Kamal said...

டவுசர் அண்ணாத்தா இம்மாதூரம் வந்து சொன்னதுக்கு ரொம்ப தாங்க்ஸ் வரேன் வந்து உங்கள் பதிவை படிக்கிறேன்.


மகா வருகைக்கு மிக்க நன்றி.

சாருஸ்ரீராஜ் said...

சூப்பர் டிப்ஸ் , நீங்க சொன்ன மாதிரி மாவு இருந்துட்டால் போதும் , பசங்களை சமாளித்து விடலாம் வெரைடியான தோசை வகைகளை செய்து

Jaleela Kamal said...

ஆமாம் சாருஸ்ரீ, தோச மாவு இருந்தால் டிபன் கவலைகிடையாது