
ஆண்கள் இஹ்ராம் கட்டி இருப்பதால் அவர்களுக்கு பணம் , பர்ஸ், பாஸ்போட் போன்றவை எல்லாம் எடுக்க சிரமமாக இருக்கும் பெண்கள் அவர்கள் ஹாண்ட் பேகில் பாஸ்போர்ட், டிக்கெட், பணம் போன்றவைகளை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள்.
அவர்களால் அடிக்கடி எடுக்க முடியாது.
சாப்பாடு சமைத்து சாப்பிடுபவர்கள்.
எல்லாம் ரெடி மேட் இப்ப கிடைக்கிறது அது போல் வாங்கி கொள்ளுங்கள்.
அணில் புட்டு மாவு அவிக்க கூட தேவையில்லையாம், அப்படியோ ஒன்றூக்கு ஒன்று தண்ணீர் ஊற்றி ஊறவைத்து சிறிது நேரத்தில் ரெடி ஆகிடும்.
நிறைய வாங்கிக்கொள்ளுங்கள். அடிக்கடி உப்புமா போட்டு கொள்ளலாம்.
புளியோதுரை, லெமென் ரைஸ் மிக்ஸ் எல்லாம் வாங்கி வைத்து கொள்ளுங்கள்.எல்லா பொருட்களும் அங்கு கிடைக்கிறது (தயிர், முட்டை, பிரெட் போன்றவை அங்கு வாங்கி வைத்து கொள்ளுங்கள்)
காட்டன் நைட்டி + ஷரய் , காட்டன் சேலை வைத்து கொள்வது நல்லது, சுடிதார் அணிபவர்கள் , பேண்ட்டுக்கு இலாஸ்டிக் வைத்து தைத்து கொள்ளுஙக்ள்.
நைலான் சேலை கூட்டத்தில் இழுத்து விட்டால் பிறகு ரொம்ப பாடாகா போய்விடும்.
பூட்டு சாவியில் சிறியதாக மார்க்கரால் எத்தனை லக்கேஜோ அது அனைத்திலும், நம்பர் 1, 2 , பூட்டுக்கும் சாவிக்கும் போட்டு கொள்ளுக்னக்ல் எடுத்து திறக்க வசதியாக இருக்கும்
செருப்பு கூட்டத்தில் தேட முடியாது, ஆகையால் தனியாக துண்டாக தெரியும் பையில் வைத்து செருப்பு வைக்கும் கேட் பக்கம் ஒரே இடமாக பார்த்து வைகக்வும்.
குழந்தைகளை ஜாக்கிரதையாக வைத்து கொள்ளுங்கள். அதை பற்றி முதல் பதிவில் போட்டுள்ளேன்.
கீழே உள்ள பதிவு அனைத்தும் சுனஹைனாவின் கடைசியா எழுடின ஹஜ் பதிவு. இப்ப தான் பார்த்தேன் , அதையும் இங்கு காப்பி பேஸ்ட் போட்டுள்ளேன் பார்த்து கொள்ள்ளுங்கள்.மேலும் விபரஙக்ளுக்கு சுஹைனாவின் ஹஜ் பற்றி எழுதி இருக்கும் 42 பதிவுகளையும் பார்க்கவும்.
சுஹைனா வின் ஹஜ் பாகம் 42 பகுதி அவங்க அனுபவத்தை போட்டு இருக்காங்க ரொம்ப பயனுள்ளதா இருக்கும் படித்து பாருங்கள்.
ஹஜ் கமிட்டி மூலம் போகிறவர்களுக்கு இது ரொம்ப பயன் படும்.
ஹஜ்ஜுக்கு ஸ்பெஷல் பாஸ்போர்ட் என்று இருந்த நிலைமை மாறி, தற்சமயம், பொது பாஸ்போர்ட் என்று கொண்டு வந்து விட்டதால், முன்கூட்டியே பாஸ்போர்ட் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
சூட்கேஸ்களின் எடை 25 கிலோவுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், கஸ்டம்ஸில் பிரச்சினை வரும்.ஹேண்ட் லக்கேஜ் 10 கிலோ அளவிற்குள் இருந்தாலும், அளவு பெரியதாக இருந்தால், ப்ளைட்டில் நம்முடன் வைக்க அனுமதிக்க மாட்டார்கள். அதனால், இதில் கவனம் தேவை.
ஹேண்ட் லக்கேஜுக்கு ஸ்கூல் பேக் போல் முதுகில் மாட்டும் பை எடுத்துக் கொண்டால், அதிக தூரம் நடக்கும் போது சவுகரியமாக இருக்கும்.
நம்முடைய லக்கேஜுக்கு ஒரே கலரிலான ரிப்பன்கள் கட்டி, பெயர் மற்றும், நம்முடைய நம்பர் எழுத வேண்டும்.பெண்களுக்கு நைட்டி ஏற்ற ஆடை. உள்ளே போட உள்பாவாடைக்குப் பதில் சுடிதார் பேண்ட் போல தைத்துக் கொண்டால், ரூமில் அந்நிய ஆண்கள் இருக்கும் போது, கஷ்டமில்லாமல் இருக்கும்.
நைட்டியில், மேல் பாக்கிட் வைத்துத் தைத்துக் கொண்டு, அதில், ஒட்டும் ஸ்டிராப் வைத்துத் தைத்துக் கொண்டால், பணம் பாதுகாப்பாக இருக்கும்.
அதோடு, புர்காவில் கீழே இரு புறமும் பெரிதாக பாக்கிட் வைத்துத் தைத்துக் கொண்டால், செல்போன், சிறிய முஸல்லா போன்றவை வைக்க ஏதுவாக இருக்கும்.தலைமுடிக்கு வைக்க, ரிப்பன் ஒன்றிரண்டு எடுத்துச் சென்றால், இஹ்ராமில் முடி உதிராமல் கட்டிக் கொள்ளலாம்.சைக்கிள் பூட்டு அல்லது சங்கிலி பூட்டு ஒன்று எடுத்து செல்வது, ஹரமிலும், மினாவிலும் மிக உபயோகமாக இருக்கும்.
போகும் போது, உறவுகள் ஏர்ப்போர்ட்டுக்கு வந்தாலும், ஒரிரு நிமிடமே பார்க்க முடியும். அதனால், ஹஜ் கமிட்டியோடு அனுப்பிவிட்டால், வீண் அலைச்சல் இல்லை.பெட்ஷீட், ஜமுக்காளம் கொண்டு செல்ல தேவையில்லை.
நான் கொண்டு சென்றதை மடிப்பு கலையாமல் திருப்பி கொண்டு வந்து விட்டேன்.தற்சமயம் ஸ்கேன் வசதி வந்துவிட்டதால், கஸ்டம்ஸில் நம்ம பேக் பிரிக்கப்படுவதில்லை. சந்தேகத்துக்குரிய பொருள் இருந்தால் மட்டும் பிரிப்பார்கள்மினாவில் நமக்கு ஆளுக்கொரு புது பெட்ஷீட், தலையணை தருவார்கள். அது நமக்கு சொந்தம். எடுத்து வராவிட்டால், டிஸ்போஸ் செய்து விடுவார்கள்.
நம்பர் லாக்(பூட்டு) எடுத்துச் சென்றால், மிகவும் உபயோகமாக இருக்கும். மினாவில் நம் உடைமைகளை, அங்கிருக்கும் இரும்பு தூணில் சங்கிலி பூட்டு, நம்பர் லாக் உதவியால் நான் பூட்டிக் கொண்டேன்.பெண்கள் எக்ஸ்ட்ரா புர்கா ஒன்று எடுத்துச் செல்ல வேண்டும்.
மார்க்கிங் பேனா எடுத்துச் செல்வது அவசியம்.கறி மற்றும் காய்கறிகளை, பொது பிரிஜ்ஜில் வைப்பதால், பாலிதீன்பையில் மேல் மார்க்கிங் பேனாவால் நம் பெயர் எழுதி வைத்து விட்டால், அநாவசிய குழப்பங்களைத் தவிர்க்கலாம்.
மக்காவில், டாக்ஸிக்கு, தனி நபர் தலை கணக்கு தான். அதாவது 10 ரியால் என்று கேட்டால், தலைக்கு பத்து ரியால் என்று பொருள்.ரஷ்ஷான ஹஜ்ஜுடைய நேரத்தில், முடிந்தவரை எங்கு சென்றாலும் குழுவாக ( 6 அல்லது 8 பேர்) சென்றால், சுலபமாக டாக்ஸி கிடைக்கும்.
அதோடு, காசும் நியாயமாகக் கேட்பார்கள்.ஒருவர், இருவர் என்றால் யாரும் இல்லாத டாக்ஸியில் ஏறாமல் இருப்பது நல்லது.மினா சென்றவுடன் அங்கு கேட்டு, எப்படியாவது அச்சடிக்கப்பட்ட, மினாவின் மேப் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
மிகவும் உபயோகப்படும்.ரூம் டு மினா, மினா டு அரபா, அரபா டு முஜ்தலிஃபா கண்டிப்பாக எல்லோருக்கும் பஸ் வசதி கிடைக்கும். அடுத்தவர் சொல்வதைக் கேட்டு அடித்துப் பிடித்து ஏற வேண்டியது இல்லை. ஆனால், சொன்ன நேரத்துக்குப் போகாவிட்டால், பஸ்ஸை தவற விட நேரும்.
1. இது சகோதரர் நவாஸ் சொன்னது யாரும் உங்கள் உறவினர் அங்குசெல்பவருக்கு உதவி தேவை என்றால் அவர் கீழே கொடுத்துள்ள நம்பரில் தொடர்பு கொள்ளவும்.ஹாஜிகள் தெரிந்துகொள்ள வேண்டிய நல்ல தகவல் கொடுத்திருக்கின்றீர்கள்.நண்பர்கள், அவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் யாரேனும் ஹஜ்ஜுக்கு வருவதாக இருந்தால் அவர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்படுமானால் என்னை +966 504672540 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளச்சொல்லுங்கள். நான் ஜித்தாஹ்வில் இருக்கிறேன். என்னால் முடிந்த உதவிகள் அவர்களுக்கு செய்ய எனக்கு உதவி செய்யுங்கள்.ஒரு சிறு குறிப்பு. உணவு தயாரிப்பதற்குண்டான மசாலா கொண்டு வருபவர்கள் “கசா கசா” கொண்டு வரவேண்டாம். அது இங்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகும். வீணான பிரச்சனை ஏர்ப்போர்ட்டில் ஏறபடும்
2. my name is azeem basha i am residing in jeddah, insha allah i am planning go as volunteer to help hajis in mina for last 3 days of haj, hajis can call me in mina if they need any help. my mobile no. 0502032546
இதை படிக்கும் அனைத்து சகோதர சகோதரிகளும் நானும் என் கணவருடன் கூடிய விரைவில் ஹஜ் செல்ல துஆ செய்யுங்கள்
5 comments:
நிறைவான பணியை செய்துகொண்டிருக்கின்றீர்கள். பாராட்டுக்கள்
Jazakallahu khair..migavum ubayogamana padhivu..
நவாஸ், நாஸியா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
அன்பு சகோதரி ஜலிலா,
மிக அருமையான சேவை இது, புதிதாக செல்பவருக்கும் மிகவும் உபயோகமான பதிவு.
நான் என் பணி நிமித்தமாக ஒரு தடவை “ரியாத்” வந்து இருந்த போது இங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நேர குறைவின் காரனமாக சரியாக பார்க்க முடியவில்லை,தொழுகைக்கும் போக முடியவில்லை அன்றே “கெய்ரோ” போக வேண்டி இருந்ததால் இன்னும் என் குறை தீரவில்லை, அல்லாவின் அருள் இருந்தால் விரைவில் நிறைவேறும்.
வாழ்க வளமுடன்
ஹைஷ் ரொம்ப சந்தோஷம். என் பதிவு படித்து பதில் போட்டதற்கு.வருகைக்கு மிக்க நன்றி.
நீங்கள் தொழுவீர்களா?
Post a Comment