
பெஸ்ட் பிரெண்ட் அவார்டு
இதை ராஜ் குமார் (குறை ஒன்றும் இல்லை) அவர்கள் கொடுத்து இருக்கிறார்,மிக்க நன்றி ராஜ் குமார்.அவருடைய பிளாக்கில் காமடி ரொம்ப சூப்பர்.
பிளாக் உலகில் நான் புதிதல்ல போன வருடமே என் தோழி இலா எனக்கு டீம் பிளாக் எழுதசொன்னாங்க நானும் ஒரு சிலது போட்டு விட்டு சரியாக புரிய வில்லை ஆகையால் விட்டு விட்டேன்.
பிறகு பாயிஜா டிசம்பரில் ஆர்ட் வொர்க்கை பிளாக்கில் சூப்பராக போட்டு மெயில் அனுப்பினார், அதை பார்த்ததும் முதலில் ஒரு 25 பேருக்கு அனுப்பி இருப்பேன். எனக்கும் ஆசை வந்து விட்டது. உடனே ரொம்ப முயற்சி செய்து சிலவற்றை போட்டேன்.
பிறகு கவிதை புயல் சுஹைனா பிளாக் பார்த்ததும் ஒரு ஐடியா கிடைத்தது. அதே போல் சுஹைனா உடைய ஹஜ் விளக்கத்தையும் முடிந்தவரை எல்லோருக்கும் அனுப்பினேன்.
சுஹைனாவும் நிறைய சந்தேகங்களை தீர்த்து வைத்து இருக்காங்க நன்றி சுஹைனா எனக்காக சமையல் லெம்ளேட் ஒன்றும் போட்டு கொடுத்து இருக்காங்க நன்றி சுஹைனா
அதிலிருந்து எப்படி பெயர் வைப்பது எப்படி என்று தெரியாமல் துண்டு துண்டா நாலு பிளாக்கில் போட்டு உள்ளேன்.
என்னுடைய அனைத்து டிப்ஸ்களையும் = www.tips-jaleela.blogspot.com
என்னுடைய தூஆக்களை = www.jaleela-duwa.blogspot.com
என்னுடைய குழந்தை வளர்பு பகுதி =www.kidsfood-jaleela.blogspot.com
என்னுடைய சமையல் = www.jaleelacookery.blogspot.com
இந்த நான்கு பிளாக்கிலும் என் பதிவுகள் மொத்தம் 250 இருக்கும்.
ஏற்கனவே அருசுவை டாட் காமில் என் குறிப்புகள் 500 க்கு மேல் இருக்கிறது.
தமிழ் குடும்பம் டாட் காமில் 300 க்கு மேல் டிப்ஸ்கள் இருக்கிறது.
நன்றி அருசுவை, தமிழ் குடும்பம்.
ஆனால் குழந்தை வளர்பிலும், சமையல் தளத்திலும் பதிவுகள் போட முடியவில்லை.
ஆகையால் டிப்ஸ் பிளாக்கில் இப்போதைக்கு போடுகிறேன்.
சமையல் குறிப்புகளை வேறு பிளாக் ஓப்பன் செய்து போடலாம் என்று இருக்கிறேன்
எல்லாத்தையும் ஒன்றாக போடலாம் என்றால் எப்படி என்று தெரியவில்லை தெரிந்தவர்கள் உதவவும்.
இந்த பெஸ்ட் பிரெண்ட் அவார்டை யாருக்கு கொடுப்பது எல்லோரும் அவார்டு வாங்கி விட்டார்கள்.எல்லோரும் பதிவுலகில் புலியாக இருக்கிறார்கள்.
ஆகையால் இதை படித்து தவறாமல் கருத்தை சொல்கிறவர்கள் அனைவரும் என் பிரெண்ட் தான்.இங்கு பதில் அளிக்கும், இதை படிக்கும் அனைவருக்கும் இதை வழங்குகிறேன்.
என் பதிவுகளுக்கு தவறாமல் பதில் அளிக்கும் பாயிஜா, மேனகா, நவாஸ்,ஷபிக்ஸ்,ஹர்ஷினி எல்லோருக்கும் நன்றி
இதை பார்க்கும் படிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இதை கொடுக்கிறேன், ஏற்றுக்கொள்ளுங்கள்.
11 comments:
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஜலிலாக்கா!!
நன்றி மேனகா
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஜலிலாக்கா
நன்றி மேனகா
வாழ்த்துக்கள்!! மிக்க மகிழ்ச்சி சகோதரி
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி. அதே சமயம் எனக்கும் இந்த விருதை வழங்கி இருக்கின்றீர்கள், மிக்க நன்றி. எப்பொழுதும் போல் தொடர்ந்து நல்ல பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அக்கா..
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
ஷபிக்ஸ், நவாஸ் உங்கள் இருவரின் உடனடி பின்னூட்டம் தான் அடுத்து என்ன எழுதலாம் என்று யோசிக்க வைக்கிறது.
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி,
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
நன்றி பாயிஜா, பிளாக் ஆரம்பித்த புதிதில் நீங்கள் ஊக்கம் கொடுக்கவிலலி என்றால் நான் பதிவே போட்டு இருக்கமாட்டேன்.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!
எனக்கும் ஆரம்பத்தில் ஒன்றுமே தெரியாது (இன்னைக்கும் அப்படிதான் இருக்கேன்) மற்றவைர்களை பார்த்துதான் கற்றுக்கொண்டேன்.
பாயிஜா மேனகா நன்றி.
நன்றி ஜலீலாக்கா,
உங்களுக்கு மெயிலில் பதில் தருகிறேன்.
Post a Comment