இந்தியாவிலிருந்து சில பேர் கணவன் மனைவி என்று செல்கிறார்கள், சில ஊர்களில் பிள்ளைகளயும் அழைத்து செல்கிறார்கள், குடும்பத்துடன் ஹஜ் செய்பவர்களுக்கும் உண்டு. வெளிநாடுகளில் இருந்து போகிறவர்கள், குழந்தைகளையும் உடன் அழைத்து சொல்கிறார்கள்.
அப்படி போகும் போது குழந்தைகளை ஜாக்கிரதையாக பிடித்து கொள்ளுங்கள். அவ்வளவு பெரிய கூட்டத்தில் விட்டால் மறுபடி தேடி கண்டு பிடிப்பது ரொம்ப சிரமம்,அவர்கள் டிரெஸில் போன் நம்பர், பெயரை கூட ஒரு பேப்பரில் எழுதி பின் குத்தி வைக்கலாம்.
மெயினா பிள்ளைகளை கூப்பிட்டு போகிறவர்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா கண்ணும் கருத்துமாய் பார்த்து கொள்ளுங்கள். பச்ச குழந்தை என்றால் உங்களுடன் அவர்களை ஏதாவது கயிறுடன் கட்டி கொள்ளுங்கள். என்ன பிள்ளைய கட்டி போடுவதா என்று யோசிக்க வேண்டாம்.
நான் உம்ரா சென்றிருந்த போது அங்கு ஒரு அரபி பெண் தன் காலுடன், அந்த குழந்தை காலை கட்டி போட்டு விட்டு தொழுது கொண்டு இருந்தாங்க. பிள்ளை எங்காவது போய் விடுமே என்ற கவலை இல்லை, இன்னொரு பிள்ளை அப்ப அப்பா ஓடி கொண்டு அதை பிடிப்பதே பெரிய வேலையா போச்சு, இரண்டு மூன்று முறை கூட்டத்தில் காணபோச்சு வேறயாம்.இருக்கலாம்.
இன்னும் ஒன்று அங்கு திருடு ஜாஸ்தி, பிச்சைகாரர்கள் அதிகம்.அங்கு செல்பவர்கள் தவற விடும் குழந்தைகளின் கைய கால வெட்டி கண்ணை நோண்டி பிச்ச எடுக்க விட்டு விடுகிறார்கள், பார்க்க பரிதாபமாய் அந்த குழந்தைகள் ரோட்டில் படுத்து உருண்டு பிச்சை எடுக்கிறார்கள்.அவர்களுக்கு நீங்கள் போடும் பணம் கூட அவர்களை சென்றடைவதில்லை,பிச்சை எடுக்க விடுபவர்கள் வாங்கி கொள்வார்கள்.
ஆகையால் அதுபோல் பார்க்கும் போது அவர்களுக்கு பணமா கொடுக்காமல் சாப்பிட சாப்பாடா கொடுத்தால் அந்த குழந்தைகளுக்கு போய் சேரும்.
http://syednavas.blogspot.com/2009/06/blog-post_11.html
இந்த பதிவையும் படிக்கவும்.
அங்கு பிச்சை எடுக்கும் பிள்ளைகள் அந்த நாட்டை சேர்ந்தவர் இல்லை.இங்கு தவறவிட்டு செல்லும் பிள்ளைகளாம்.எனக்கு தெரிந்த ஒருவர் சொன்னார் அவருடன் வேலை பார்ப்பவர்.ஒரு முறை ஹஜ் போன போது கூட்டத்தில் தொலைத்து விட்டு அவர்கள் எங்கு தேடியும் கிடைக்காமல். நாடு திரும்பி விட்டார்கள்.இதற்காகவே அவர்கள் வருடா வருடம் ஹஜ் சென்று தேடினார்களாம்.கடைசியில் ஐந்தாவது வருடம் அந்த விட்டு சென்ற பிள்ளையை கண்டெடுத்தார்கள் அய்யோ என்னால் சொல்ல முடியலையே இந்த கொடுமையை, கை துண்டிக்க பட்டு நல்ல அழகாக இருந்த பிளளை ரோட்டில் போட்டு பிச்சை எடுக்க விட்டதால் கருத்து அந்த கருபின ஆட்கள் போல வே ஆகிவிட்டதாம், எப்படியே வாதடி அந்த கவர்ன்மென்ட்டில்போய் வாதாடி பிள்ளை மீட்டு வந்த்தார்களாம்..யார் ஹஜ் உம்ரா சென்றாலும் பத்து முறை தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லி அனுப்புங்கள்.குழந்தைகளை உஷாரா பிடிக்கும் படி சொல்லி அனுப்புங்கள்.
தொடரும்

1. இது சகோதரர் நவாஸ் சொன்னது யாரும் உங்கள் உறவினர் அங்குசெல்பவருக்கு உதவி தேவை என்றால் அவர் கீழே கொடுத்துள்ள நம்பரில் தொடர்பு கொள்ளவும்.ஹாஜிகள் தெரிந்துகொள்ள வேண்டிய நல்ல தகவல் கொடுத்திருக்கின்றீர்கள்.நண்பர்கள், அவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் யாரேனும் ஹஜ்ஜுக்கு வருவதாக இருந்தால் அவர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்படுமானால் என்னை +966 504672540 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளச்சொல்லுங்கள். நான் ஜித்தாஹ்வில் இருக்கிறேன். என்னால் முடிந்த உதவிகள் அவர்களுக்கு செய்ய எனக்கு உதவி செய்யுங்கள்.ஒரு சிறு குறிப்பு. உணவு தயாரிப்பதற்குண்டான மசாலா கொண்டு வருபவர்கள் “கசா கசா” கொண்டு வரவேண்டாம். அது இங்கு தடை செய்யப்பட்ட ஒன்றாகும். வீணான பிரச்சனை ஏர்ப்போர்ட்டில் ஏறபடும்
2. my name is azeem basha i am residing in jeddah, insha allah i am planning go as volunteer to help hajis in mina for last 3 days of haj, hajis can call me in mina if they need any help. my mobile no. 0502032546
இதை படிக்கும் அனைத்து சகோதர சகோதரிகளும் நானும் என் கணவருடன் கூடிய விரைவில் ஹஜ் செல்ல துஆ செய்யுங்கள்
4 comments:
சிறப்பான பனியை செய்துகொண்டு இருக்கின்றீர்கள் சகோதரி. தொடரட்டும் இது.
நல்ல தகவல். இருந்தாலும் பிச்சை எடுப்பவர்கள் எல்லோரும் வெளிநாட்டவர் அல்ல! ரியாத்தில் அரபி பெண்கள் மற்றும் பிள்ளைகள் நிறையவே பிச்சை எடுக்கிறார்கள்.
மினா டெண்டில் எனது 7 வயது மகளை காணமல் தேடினோம் .டென்ட் எல்லாம் ஒரேமாதிரி இருப்பதால் பிள்ளை தனியாக போனால் திரம்ப வர தெரியாது .டெண்டில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் .வாப்பாபவை பார்க்க போறேன் என்று சொல்லி வழி தவறி விட்டாள்.
நவாஸ் மிக்க கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
செல்வராஜ் ஆமாம் நீங்கள் சொல்வது போல் அங்குள்ள அரபி பெண்களும் இருக்கிறார்கள்.
நான் அங்கு சென்ற 5 நாளில் கண்டது அதை தான் பதிவில் போட்டு உள்ளேன்.
உங்கள் வருகைக்கும் , கருத்திற்கும் மிக்க நன்றி.
மலர், நீங்கள் சொல்வது பார்த்தால் பெற்றோர்கள் இன்னும் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
Post a Comment