துணிகளை ( சோளி மற்றும் சல்வார்) வெட்டும் போது கவனமாக உடனே அதை ஒரு துண்டு விடாமல் எடுத்து சுருட்டி அதன் செட்டுகளை ஒரு கவரில் போட்டு பத்திரமாக வையுங்கள். அங்கு இங்கு சிதர விட்டால் கை, பட்டி, கழுத்து துணி இதில் ஏதாவது ஒன்று காணாமல் போய் விடும்.யாருடனும் சண்டை போட்டு விட்டு, பிள்ளைகளை திட்டி விட்டு துணிகளை வெட்டினால் உஷார் உடனே வெட்டிய துணியை பத்திரப்படுத்தவும்.இல்லை என்றால் எப்படியும் ஒரு கையோ, பட்டி துணியோ காணாமல் போகும், இல்லை உங்கள் மேல் கோபமாக இருப்பவர்கள் அதை கண்டமட்டுக்கும் எங்காவது வெட்டி விடுவார்கள்.

எனக்கு என் தங்கைக்கும் ஒன்றாக கல்யாணம் ஆச்சு, எல்லா கல்யாண சட்டையும் ஆளுக்கு ஒரு டஜன் அவள் தான் தைத்தாள். நான் அதற்கு கொக்கி தைப்பது, ஹெம்மிங் செய்வது அப்போது.நான் தையல் கிளாஸ் போகல, நல்ல அழகான பொன் மஞ்சள் நிற சட்டை ஹெம்மிங் பண்ணி முடித்ததை யாரோ கத்த்ரியால் கட் பண்ணி விட்டார்கள்.
ஆகையால் வீட்டில் தைப்பவர்கள், எல்லாவற்றிலும் கவனமாகவும் உஷாராகவும் தைக்கனும்.
அடுத்து முன்று வயதுக்குற்பட்ட குழந்தைகளை வைத்து கொண்டு தைக்காதீர்கள்.
நீங்கள் தைக்கும் போது ரொம்ப ஸ்வாரஸியமாக இருக்கும் அந்த நேரம் குழந்தை என்ன ஜோராக ஓடுகிறதே என்று கையை வைப்பார்கள்.
( இது போல் நான் தைக்கும் போது சின்ன பையன் மிஷினில் உள்ள ஊசியில் கையை விட்டு விட்டான். அப்படியே பகீர் என்றாகி விட்டது. அப்படியே கட்டை விரலில் உள்ளே போய் விட்டது. நல்ல வேலை சட்டுன்னு அவன் கைய எடுக்கல அப்படியே சக்கரத்தை பின்புறமாக திருப்பி விரலை எடுக்க வைத்தேன்).பகீர் என்று ஆகிவிட்து. அதிலிருந்து தைக்குக்கும் போது ரொம்ப கவனமாக யாரும் இல்லாத நேரம் அல்லது எல்லோரும் துங்கிய பிறகு தைப்பது.
கத்திரி கோலையும் உடனே பத்திர படுத்தனும் இல்லை என்றால் அதை எடுத்து விளையாடு கிறேன் என்று முடியை கட் பண்ணி கொள்வார்கள். உடனே ஊசியால் குழந்தைகளின் கையை தைக்க வாய்பப்புகள் இருக்கிறது.
நீங்களும் தைக்கும் போது திரும்பி பார்க்காதீர்கள், பேசி கொண்டே தைக்காதீர்கள். உங்கள் கையே போய் மாட்டிக்கொள்ளும்.
அது போல் இரண்டு பேர் தைக்கும் போது பேச்சு ஸ்வாரசியத்தில் பெருவிரலுல் மிஷினி ஊசி போய் மாட்டி கையுக்கு தையல் போட்டார்கள்.அதே போல் கணவன் மனைவி இருவரும் டைலர். மனைவி வெட்டி கொடுப்பார் கணவன் கடையில் கொண்டுவந்து தைப்பார்.
ஒரு நாள் அப்பளம் பொரித்து விட்டு அந்த எண்ணைய கீழே வைத்து விட்டு , துணி வெட்ட ஆரம்பித்து இருக்கிறார், வீட்டில் இருந்த சின்ன குழந்தை கொதிக்கிற எண்னையில் கையை விட்டு விட்டது. சின்ன குழந்தைகள் உள்ள வீட்டில் தையலை வைத்து தான் பிழைப்பே என்றால் மிக கவனமாக தைக்க வேண்டும்.
2 comments:
துனி தைக்கிறத விட குழந்தைகள் மேல் கண் வைக்கிறது தான் முக்கியம் இல்லயா?
பிள்ளைங்களை ரொம்ப கவனமா பார்த்துக்கணும்.
நல்ல டிப்ஸ் சகோதரி
Post a Comment