Saturday, December 19, 2009

தலைக்கு மருதாணி

1. கொஞ்சம் வெள்ளை முடி தோன்றினாலே சில பேர் பத்து முறை கண்ணடியை பார்ப்பார்கள். அய்யோ நாம் கிழவியாகிவிட்டோமே என்று தோனும்.


2. யாரும் கிழவி கிடையாது மனதலவில் எல்லோரும் என்றூம் பதினாறு தான்.


3. சிலருக்கு இளநரையும் வருவதுண்டு. அடிக்க‌டி ந‌ல்லெண்ணை தேய்த்தால் கூட‌ இள‌ந‌ரை வ‌ர‌ம‌ல் இருக்கும்










4. சிலருக்கு தலைக்கு மெகந்தி போட்டால் ஒத்துக்காது.தலை வலி ஜலதோஷம் பிடித்து கொள்ளும். அதற்கு கிராம்பை சேர்த்து கொள்ளுங்கள்.



5. மெகந்தி கலவை மருதாணி பொடி, தயிர், திக்கான டீ டிகாஷன்,
(கருவேப்பிலை, வேப்பிலை சிறிது கரிசலாங்கண்ணி கீரை,பாசி பயிறு) இதேல்லாம் காயவைத்து திரித்து வைத்து கொள்ளுங்கள்.

இதை மேலே குறிப்பிட்டுள்ள மெகந்தி கலவையில் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள்.



6. இப்போது அனைத்தையும் நல்ல இட்லி மாவு பதத்திற்கு கரைத்து ஒரு இரும்பு வானலியில் வைத்து இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் தலையில் தேய்த்து 20 நிமிடம் (அ) 30 நிமிடம் ஊறவைத்து குளிக்கவும்.



இந்த கலவையை ஆறு மணி நேரம் தலையில் வைத்து ஊறவைத்து தேய்த்தால் நன்கு பலன் கிடைக்கும் என்று கேள்வி பட்டேன்.


பீட்ரூட் சாறும் எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளிக்கலாம்.
நல்லெண்ணை அடிக்கடி தேய்த்து எண்ணை குளியல் போட்டாலும் நரை முடி வராது என்று கேள்வி பட்டுள்ளேன்.

7. செடிக்கு எப்படி தண்ணீர் ஊற்றி வளர்க்கிறோமோ அப்படி தான் முடிக்கும். நல்ல நிறைய எண்ணை தலையில் தேய்த்து மசாஜ் செய்து வாரம் இருமுறை குளித்தால் முடியும் வளரும். நல்ல ஷைனிங்கும் கிடைக்கும்.

6 comments:

S.A. நவாஸுதீன் said...

நல்ல குறிப்புகள்.

அண்ணாமலையான் said...

"நன்கு பலன் கிடைக்கும் என்று கேள்வி பட்டேன்.
அப்போ நாங்கதான் லேப் எலியா? நல்லாருக்கு உங்க ஒர்க்கு...

athira said...

ஜலீலாக்கா,
அனைவருக்கும் இந்தக் காலத்தில் அவசியமான, நல்ல குறிப்பை படத்தோடு போட்டிருக்கிறீங்கள். நன்றாக இருக்கு.

Vikis Kitchen said...

Thanks Jaleela. I will try this using kirambu.

Jaleela Kamal said...

அதிரா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

விக்கி கிராம்பு சேர்த்து தேய்த்து பாருங்கள். சளி பிடிப்பதில் இருந்து கொஞ்சம் விடுதலை கிடைக்கும்