Wednesday, October 28, 2009

கல்யாண பெண்ணுக்கு நெற்றி சுட்டி வைக்கும் போது



கல்யாண பெண்ணுக்கு நெற்றி சுட்டி வைக்கும் போது அது ஒரு இடத்தில் நிற்காது அங்கும் இங்கும் பிரண்டு சைடில் போய் நிற்கும்.

எந்த விஷேஷம் ஆனாலும், பூப்பெய்தி பெண்களுக்கு, கல்யாணத்திற்கு, வளைகாப்பிற்கு ஜடை தைத்து நெற்றி சுட்டி வைப்பார்கள்.

அதே பிள்ளைகளுக்கும் வைத்து விடுவார்கள் பள்ளியில் புரோகிராமில் டான்ஸ் ஆடுவார்கள் அப்ப நெற்றி சுட்டியும் சேர்ந்து ஆடும்.

மொத்தமா செட் நெற்றி சுட்டி என்றால் பிரச்சனை இல்லை அப்படியே தலைக்கு செட்டாக கிடைத்து விடும்.

அதற்கு முன்னாடி வகிடு ஆரம்பத்தில் நெற்றி சுட்டி உடன் ஒரு சிறிய அரை இன்ச் அளவுள்ள பித்தலை சேஃப்டி பின் கோல்ட் கலரில் இருக்கும் அதை குத்தி விட்டால் அப்ப அப்ப அட்ஜஸ்ட் செய்ய தேவையில்லை.
அது அப்படியே வைத்த இடத்தில் நிற்கும்


ஒருவர் எதிரில் நிற்கும் தோழி அதை அப்ப அப்ப அட்ஜஸ்ட் செய்து கொண்டே இருப்பார்கள்.
அதே போல் ஆசை பட்டு கல்யாணத்தில் நெற்றி சுட்டி வைத்து வருபவர்களுக்கும் அப்படி இப்படி போய் நிற்கும்




கல்யாண பெண்ணிற்கும் டென்ஷன் இல்லை, இப்பதெல்லாம் தங்கத்தில் தான் பயன் படுத்துகிறார்கள் அது தொலைந்து போகவும் வாய்ப்பில்லை.



5 comments:

S.A. நவாஸுதீன் said...

லேடிஸ் ஸ்பெசலா இருக்கு. கலக்குங்க

Menaga Sathia said...

photos+tips super!!

Anonymous said...

ஜலீலாக்கா... படங்களும் அருமை விளக்கமும் நன்று.
நாங்கள் இதை உச்சிப்பட்டம் எனச் சொல்வோம்.

Jaleela Kamal said...

அனானி வருகைக்கு மிக்க நன்றி, உச்சிபட்டமா இது எந்த ஊரு பாழை. கேள்வி பட்டதே இல்லை

பெயரை சொல்லி இருக்கலாம்.

Jaleela Kamal said...

நவாஸ் மேனகா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி