1. கொஞ்சம் வெள்ளை முடி தோன்றினாலே சில பேர் பத்து முறை கண்ணடியை பார்ப்பார்கள். அய்யோ நாம் கிழவியாகிவிட்டோமே என்று தோனும்.
2. யாரும் கிழவி கிடையாது மனதலவில் என்றூம் பதினாறை இருங்கள்.
3. சிலருக்கு இளநரையும் வருவதுண்டு.
4. சிலருக்கு தலைக்கு மெகந்தி போட்டால் ஒத்துக்காது.அதற்கு கிராம்பை சேர்த்து கொள்ளுங்கள்.
5. மெகந்தி கலவை மருதாணி பொடி, தயிர், திக்கான டீ டிகாஷன்,
(கருவேப்பிலை, வேப்பிலை சிறிதுகரிசலாங்கண்ணி கீரை,பாசி பயிறு) இதேல்லாம் காயவைத்து திரித்து வைத்து கொள்ளுங்கள்.
இதை மேலே குறிப்பிட்டுள்ள மெகந்தி கலவையில் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள்.
6. இப்போது அனைத்தையும் நல்ல இட்லிமாவு பதத்திற்கு கரைத்து ஒரு இரும்பு வானலியில் வைத்து இரவு முழுவதும் ஊறவிட்டு, கலையில் தலையில் தேய்த்து 20 நிமிடம் (அ) 30 நிமிடம் ஊறவைத்து குளிக்கவும்.
இந்த கலவையை ஆறு மணி நேரம் தலையில் வைத்து ஊறவைத்து தேய்த்தால் நன்கு பலன் கிடைக்கும் என்று கேள்வி பட்டேன்.
பீட்ரூட் சாறும் எடுத்து தாலையில் தேய்த்து ஊறவைத்து குளிக்கலாம்.
No comments:
Post a Comment