
ஆபிஸ் போகும் பெண்களும், மற்ற பெண்களும் அவசர அவசரமாக தங்கள் கை பையில் சில்லரைகளையும் உள்ளே திணிப்பதால் அவை உள்ளே உள்ள ஜிப்பில் ஓட்டை அடைந்து மாட்டி கொள்ளும்
எல்லா பெண்களும் ஹாண்ட் பேக் பயன் படுத்தும் போது அதில் அவசர அவசரமாக பில்லை தினிப்பது, சில்லரைகளை அப்படியே கிடைத்த இடத்தில் சொருகுவது, ஏன் தங்க நகைகள் மோதிரம், மூக்குத்தி ,கம்மல் போன்ற சிறிய நகைகளை அப்பபடியே பேக்கில் போட்டு திணிப்பார்கள்.
அதே இடத்தில் வீட்டு சாவியும் போடுவீர்கள். அடிக்கடி கையை விட்டு எடுப்பதால் விரலில் உள்ள நகம் உள் ஜிப்பினுள் பட்டு பட்டு கிழிந்து இருக்கும்.
அதன் சிறிய ஓட்டை வழியாக சின்ன நகை, சில்லரைகள் எல்லாம் உள்ளே போய் மாட்டி கொள்ளும். அவசரத்துக்கு தேடினால் கிடைக்காது
வாரம் ஒரு முறையாவது ஹண்ட் பேக்கை நன்கு செக் செய்து குலுக்கி விட்டால் தொலைந்து போன பொருட்கள் எல்லாம் அங்கு கிடைக்கும்.அப்படியே அடைத்து வைக்காமல் சிறிது நேரம் கைப்பையை திறந்து வைத்து ஒரு ஸ்கேலை குறுக்காக வைத்து பிரித்து காற்றோட்டமாக விட்டு பிறகு மூடவும்.
இது போல் நிறைய பேருக்கு காணாமல் போன மூக்குத்தி கம்மல் எல்லாம் ரொம்ப நாள் கழித்து கிடைத்துள்ளது.
இப்படி தான் ஒரு பெண் ஹாஸ்பிட்டலுக்கு பிரசவத்துக்கு போகும் போது டாக்டர் ஹேர் கிளிப், கம்மல்,மூக்குத்தியை கழட்ட சொன்னார்கள், அந்த பெண் இப்படி கழற்றி அவசர அவசரமா திணித்ததில் அது இப்படி தான் உள்ளே மாட்டி கொண்டு ரொம்ப நாள் கழித்து கிடைத்தது.
9 comments:
கைப்பை உபயோகிப்பவர்களுக்கு நல்ல ஆலோசனைகள்.
யே எல்லாரும் ஓடியாங்க இந்த டிப்ஸ ஒழுங்கா கடைப்பிடிங்க.. கைப்பைய காப்பாத்திங்கங்க...ஆமா....
ஜலீலாக்கா, நீங்கள் சொன்னதத்தனையும் உண்மையே, எல்லோர் நிலைமையும் இப்படித்தான். போனகிழமை கடையில் சில பொருட்கள் வாங்கிவிட்டு, காசு கொடுப்பதுக்காக கையை விட்டு எடுக்க எடுக்க காசு வரவில்லை, எல்லாம் பழைய bills தான் வந்தது, அதைப் பார்த்த கசியர் லேடி சொன்னா, ஹீ.... ஹீ... ஹீ... என் ஹாண்ட் பாக் போலவே இருக்கு உங்களுடையதும் என்று:), இதிலாவது நாம் எல்லாரும் ஒற்றுமையைக் கடைப்பிடிக்கிறோமே:):).
நவாஸ் , அண்ணாமலையான் அவர்கள்
கருத்து தெரிவித்தமைக்கு நன்றி
ஆமாம் அதிரா இது நிறைய பேர் சொல்லி கேட்டு இருக்கேன், எனக்கே இது என் சாவி அடிக்கடி உள்ளே போய் மாட்டி கொள்ளும்.
இது எல்லா பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டியது.நிறைய சில்லறகளும் உள்ளே தான் இருக்கும். ஒரு நாள் உட்கார்ந்து பேக்கை தலை கீழா தட்டினால் காணா போன பொருளெல்லாம் கிடைக்கும்.
//வாரம் ஒரு முறையாவது ஹண்ட் பேக்கை நன்கு செக் செய்து குலுக்கி விட்டால் தொலைந்து போன பொருட்கள் எல்லாம் அங்கு கிடைக்கும்.//
இத சொன்னீங்களே, சூப்பர் பாயின்ட்!!
ஆமாம் இது எல்லா பெண்களுக்கு தெரிய வேண்டிய டிப்ஸ்.
நிறைய பேருக்கு இது போல் ஆகி இருக்கு,
ஷபிக்ஸ் வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
உண்மைதான், பெண்களுக்கு கைப்பை போல் ஆண்களுக்கும் பர்ஸ், பிரிஃப்கேஸ் அதுக்குதான் நான் இரண்டுமே வைச்சுகறது இல்லை.
வாழ்க வளமுடன்
ஜலீலா அக்கா உங்க பதிவு எல்லாம் ஓவ்வெரு முத்து மாதிரி. நல்ல பதிவு போட்டு எல்லரையும் உங்க அன்பில் கட்டி போட்டு வெச்சு இருக்கிங்க. என்னையும் சேர்த்து. நல்ல பதிவு அக்கா.
Post a Comment