Sunday, August 2, 2009

சோமாஸ்





தேவையான‌ பொருட்க‌ள்.


மாவு தயாரிக்க


மைதா மாவு = அரை கிலோ
மெல்லிய பட்டு ரவை = 50 கிராம் (வ‌றுத்த‌து)
டால்டா (அ) பட்டர் = 50 கிராம்
உப்பு = ஒரு தேக்கரண்டி
சோடா மாவு = ஒரு பின்ச்


பில்லிங் தயாரிக்க‌

கச கசா = 50 கிராம் அல்லது எள்
சர்க்கரை = 150 கிராம்
தேங்காய் = அரை மூடி

நெய் = அரை தேக்க‌ர‌ண்டி

செய்முறை


மாவில் டால்ட‌வை உருக்கி ஊற்றி ம‌ற்ற‌ பொருட்க‌ளையும் சேர்த்து ந‌ன்கு கெட்டியாக‌ குழைத்து அரை ம‌ணி நேர‌ம் ஊற‌வைக்க‌வும்.

க‌ச‌ கசா (அ) எள்ளை க‌ல் க‌ளைந்து வ‌டித்து வ‌றுக்க‌வும், வ‌றுக்கும் போது வெடிக்கும் ஜாக்கிரதையாக‌ வ‌றுக்க‌வும்.

தேங்காயை துருவி கொள்ள‌வும். வான‌லியில் நெய் விட்டு தேங்காயை சிறிது வ‌றுத்து க‌ச‌ க‌சா (அ) எள்ளை சேர்த்து ச‌ர்க்க‌ரையையும் சேர்த்து வ‌றுத்து இர‌க்கி கலவையை ஆற‌விட‌வும்.

குழைத்த‌ மாவை சிறிய‌ பூரி உருண்டைக‌ளாக‌ போட்டு சோமாஸ் செய்யும் அச்சில் போட்டு ப‌ர‌வ‌லாக‌ ஒரு மேசைக‌ர‌ண்டி முழுவ‌தும் வைத்து மூடி மீதிமாவை வ‌ழித்து எடுத்துவிட‌வும்.

இப்ப‌டியே அனைத்து சோமாஸிக‌ளையும் செய்து த‌ட்டில் ப‌ர‌த்தி வைக்க‌வும் ஒட்டாம‌ல் இருக்க‌ த‌ட்டின் அடியில் மாவு தேய்த்து கொள்ள‌வும்.


எண்ணையை காய்வைத்து பொரித்து எடுக்க‌வும்.

குறிப்பு
=======


இதை இஸ்லாமிய‌ இல்ல‌ங்க‌ளில் நோன்புகால‌ங்க‌ளில் செய்வோம். இதே போல் கார‌த்தில் செய்ய்ய‌ கீமா (அ) சிக்க‌ன், காய்க‌றிக‌ள் வைத்தும் செய்ய‌லாம்.

டூர் போகும் போது எடுத்து செல்ல‌லாம் பொரித்து சூடு ஆறிய‌தும் ஒரு பெரிய‌ டிப‌னில் போட்டு வைக்க‌லாம். பிரிட்ஜில் வைத்து ஒரு வார‌ம் கூட‌ கெடாம‌ல் இருக்கும். வெளியில் என்றால் இர‌ண்டு நாளைக்கு இருக்கும்.

இது உருளைகிழ‌ங்கு ஹ‌ல்வா, கேர‌ட் ஹ‌ல்வாவைத்தும் செய்ய‌லாம்.
ப‌ட்டு போல் ர‌வை சேர்ப்ப‌தால் கிரிஸ்பியாக‌ இருக்கும்.

இதை முத‌லே செய்து பிரீஜ‌ரில் போட்டு வைத்து கொள்ள‌லாம் தேவைக்கு பொரிக்கும் சிறிது நேர‌ம் முன் எடுத்து வெளியில் வைத்து பொரித்து நோன்பு திற‌க்கும் வேளையில் வைக்க‌லாம்.

4 comments:

S.A. நவாஸுதீன் said...

இன்னைக்கு என்ன சோமாஸ் ஸ்பெசலா.

சின்ன வயசுல (மடக்கு) கொழுக்கட்டை சாப்பிட்டது. ஆனால் அது வெள்ளையா இருக்கும் (அரிசி மாவா இருக்கும்). அது மாதிரி, ஓட்டு மாவு. இதெல்லாம் மறந்தே போச்சு

Jaleela Kamal said...

இது ரொம்ப நாளா எடிட் செய்து போஸ்ட் செய்யாமல் வைத்திருந்தது, அதான் இன்று அனுப்பினேன், அங்கு வந்து பார்த்தா மேனகாவும் அனுப்பி இருக்கிறார்கள்.

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி, இது பிள்ளைக்களுக்கு ரொம்ப பிடிக்கும்.


ஓட்டுமாவா ம்ம் சூப்பரா இருக்குமே

SUFFIX said...

சோமாஸ் சூப்பர், எங்க வீட்டிலயும் சேம் மெத்தடுதான், தாங்கள் சொன்னது போல கீமா வச்சு செஞ்சா இன்னும் நல்லா இருக்கும், உங்களுக்கு போலி செய்யத்தெரியுமா, அல்லது இதையே வட்டமா செஞ்சா அது தான் போலியா? தெரிந்தால் சொல்லுங்களேன், சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு, ஒரு முறை சென்னையில் கடையில் வாங்கி சாப்பிட்டேன், அவ்வளவு டேஸ்ட் இல்லை.

Jaleela Kamal said...

ஆமாம் இது நம் இஸ்லாமிய இல்லங்களில் எல்லாம் ஓரளவிற்கு சிலருடைய சமையல் ஒரே மாதிரிதான் இருக்கும்

நாங்க கீமா வைத்து காரம் , இது இனிப்பு இரண்டும் செய்வோம் ஒரே நாளில்

போளி தெரியும் , இப்போதைக்கு என்னை தவிர யாரும் அது சாப்பிட மாட்டார்கள் செய்யும் போது கண்டிப்பா போடுகிறேன்.