புழுங்கல் அரிசி = ஒன்னறை (300 கிராம்)
அவல் = கால் டம்ளர்
வெந்தயம் = ஒரு தேக்கரண்டி
உளுந்து = ஒரு டம்ளர் குவியலாக (220 கிராம்)
1. இட்லி தோசைக்கு மாவு அரைத்து வைத்து விட்டால் அந்த வாரம் முழுவதும் ஒரு பெரிய டென்ஷன் தீர்ந்த மாதிரி.
2. இரவு ஊறவைத்து காலை அரைப்பது சிறந்து அல்லது காலை ஊறவைத்து மாலை அரைக்கலாம்.
3. அரிசி,வெந்தயம், அவலை ஒன்றாகவும், உளுந்தை தனியாகவும் ஊறவைத்து முதலில் அரிசியை கிரெயிண்டரில் ஆட்டவும், பிறகு உளுந்தை ஆட்டவும் அப்பதான் வழித்தெடுப்பது சுலபம்.
4. ஐஸ்வாட்டர் ஊற்றி அரைத்தால் மோட்டாரும் கெட்டு போகாது, மாவும் நன்கு காணும்.
மொத்தமா அரைத்து அதில் உப்பு போட வேண்டாம். தேவைக்கு அப்ப அப்ப கரைட்து ஊற்றவும்.
5. இட்லிக்கு சற்று கெட்டியாக அள்ளி ஊற்றுவது போல் கரைக்கவும்.தேசைக்கு சிறிது தளர்த்தியாக கரைக்கனும்.
6. ஆப்பத்திற்கு கொஞ்சம் தண்ணி மாதிரி கரைக்கனும் அதுவும் தேங்காய் பால் சேர்த்து கரைக்கனும்.
7. அப்படியும் மீதி ஆகும் மாவை கொண்டு ஊத்தாப்பாம், கோதுமை இனிப்பு அப்பம் போன்றவை தயாரிக்கலாம்.
8. குளிர் காலத்தில் மாவு புளிக்காது அதற்கு மாவில் உப்பு போட்டு கையால் நல்ல பிசைந்து கலக்கி வைக்கலாம்.
9. சமைக்கும் அடுப்பிற்கு அருகே வைக்கலாம்.
10 . அவல் இல்லை என்றால் சாதமும் போட்டு அரைக்கலாம், சிறிது ஜவ்வரிசி சேர்த்தாலும் நல்ல தோசை பஞ்சி போல் வரும்
8 comments:
சுப்பர் அக்கா... நான் எல்லாத்துக்கும் தனி தனியா தான் ஆட்டிட்டு இருக்கேன் !!!!!... இந்த வாரம் திரீ இன் ஒன் வாரம் தான் அக்கா :-)
வாங்க ஹர்ஷினி அம்மா டிரை பண்ணுங்கள், இது அது அதுக்கும் செய்யும் போது மாவு கரைக்கும் விதத்தில் இருக்கு இது மூன்றும் வருவது.
சரியா?
laathaa... mixie la araikalama? naanga rendu per thaan veetula.. adhanala grinder ellam kidayadhu
unga tips bloga ippa thaan paakurene..
btw enna reasono google transliteration work aagala
mixie yil araikkalaam.
ungkaLiraNdu peerukku oru veelaikku ippa waan koduththuLLa aLavil 4:1 poothum.
நாஸியா நான் முன்பு மிக்சியில் தான் அரைப்பேன்.
இது எங்கள் 4 பேருக்கு முன்று முறை செய்ய வரும்.
நீங்க உங்கள் இருவருக்கு இந்த அளவு நாலில் ஒரு பாகம் போதும்
அரைக்கும் போது ஐஸ் வாட்டர் ஊற்றி அரைக்கவும், ரொம்ப தண்ணீ ஊத்திட்டீஙகன்னா மிக்சி ய விட்டு எகிறிடும்.
பெரிய ஜார் என்றால் தாராளாமா அரைக்கலாம், சின்னது என்றால் கொஞ்சம் கொஞ்சமா அரையுங்கள்
enkita preeti blue leaf iruku.. adhula ulla peria jar la araichu pakuren.. mma kita daily ketute irupen, but indha madhiri blogla paatha konjam easy a irukum.. insha Allah try panren
ஒகே டிரை பண்ணி பாருங்கள், மிக்சியில் நிறைய போட்டு அரைக்காதீங்க. பாதி பாதியா அரையுங்கல்.
ஆனால் அரைத்து புளிக்க வைத்ததும், பிரெஷ்ஷா முதலில் இட்லி ஊற்றி விடுங்கள். பிறகு மீதி ஆவதை தோசை ஆப்பம், ஊத்தப்பம் செய்யலாம்.
Post a Comment