பூண்டு பெருங்காயம்
தே.பொருட்கள்
ஒரு முழு பூண்டு = சுட்டது
பெருங்காயம் = ஒரு தேக்கரண்டி முழுவதும்
பனை வெல்லம் = இரன்டு மேசைகரண்டி முழுவதும்
நெய் = ஒரு தேக்கரண்டி
செய்முறை
பூண்டை முழுசாக கத்தியில் குத்தி சுடவேண்டும்.
தோல் உரித்து அதை மையாக அரைத்து, வெல்லத்தை தூள்செய்து போட்டு, பெருங்காயப்பொடடி சேர்த்து நன்கு பிசைந்து அதில் நெய்யை உருக்கி ஊற்றி முன்று உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
அப்படியே முழுங்கி சுக்கு காப்பி குடிக்கவும்.
குறிப்பு:
இது வயிற்றில் உள்ள அழுக்கு, கேஸ் எல்லாத்தையும் வெளியாக்கும்.
இது சாப்பிட்டு விட்டு வேறு எதுவும் இரண்டு மணி நேரத்திற்கு சாப்பிட கூடாது.
2 comments:
வெறும் வயிற்றிலா சாப்பிடனும் அக்கா? உங்கள் தங்க்கைக்கு எப்படியிருக்காங்க? குழந்தை நல்லாயிருக்கா?
டியர் பாயிஜா தங்கை நல்ல இருக்காங்க. குழந்தையும் நலம்,
இதை மாலை 4 மணிக்கு டீ குடித்து விட்டு ஒரு மணி நேரம் கழித்து சாப்பிடனும், பிறகு இஞ்சி காபி நல்ல குடித்து விட்டு இரண்டு மணி நேரம் கழித்து , பச்சமுட்டை அடித்து குடிக்கனும்.
மறு நாள் பிள்ளை பெற்ற முழுக்கு போடுவார்கள்.
வயிற்றில் உள்ள வேண்டாத அழுக்கு, அடைத்து கொண்டிருக்கும் கேஸ் வெளியாகும்
Post a Comment